காரைக்குடியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
15/09/2025 09:42:16pm.

காரைக்குடி செப்:15 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் சார்பில், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி வரவேற்புரையாற்ற, சங்கத்தின் தலைவர் ஜி.முத்துக்குமரன் கருத்தரங்கத்தை துவக்கி வைத்துப் பேசினார். இளையோர் சேவை திட்ட இயக்குனர் கே.சண்முகம் விளக்கவுரையாற்ற, -3212 மண்டலம்-5ன் துணை ஆளுநர் டாக்டர் எஸ்.பி.சாந்தி பவர் பாயிண்ட் காணொளிக் காட்சி கொண்டு கருத்துரை வழங்கினார். சங்கத்தின் செயலாளர் ஏ.அருணாச்சலம் நன்றி கூறினார், முன்னாள் தலைவர் சரவணன், பயிற்சி ஆசிரியர்கள் உள்பட ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..