நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன் திருப்புத்தூர் 5 வது வார்டில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் உறுதிமொழி!
15/09/2025 07:28:40pm.

திருப்புத்தூர் செப்:15 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் 5 வது வார்டில் பாகம் எண் : 197 ல் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் வார்டு கவுன்சிலர் கோமதி சண்முகம் தலைமையில், நகர துணை செயலாளர் உதயசண்முகம் முன்னிலையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்க, தமிழகமெங்கும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதற்கிணங்க, திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்கட்சியினரால் இந்த உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உறுதிமொழியில், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன். பெண்கள் விவசாயிகள்-மீனவர்கள்-நெசவாளர்கள் தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். என திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதன் அடிப்படையில் திருப்புத்தூர் 5 வார்டு பகுதியில் திமுகவினருடன், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டை தலைகுனியே விடமாட்டேன் என்ற உறுதிமொழியை ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் நகர தொழிலாளர் நலத்துறை அமைப்பாளர் பி.மாதவன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், பாக முகவர் கணேசன் மற்றும் குறிஞ்சி செழியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்..