திருப்புத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா! ஊர்வலமாக நடந்து வந்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்
15/09/2025 07:27:32pm.

திருப்புத்தூர் செப்:15 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர அதிமுக சார்பில், மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில் பேரூர் கழகச் செயலாளர் எ.இப்ராஹிம்ஷா ஏற்பாட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்த அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திருப்புத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவும் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளருமான கே.கே.உமாதேவன், சிவகங்கை மாவட்ட முன்னாள் சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எல்.ஆர்.எம்.ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு, மாநில இளைஞர் இளம்பெண் பாசறை துணைச் செயலாளர் துலாவூர் பார்த்திபன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர்கள் சஃபா ராஜா முகமது, ஆசிப் இக்பால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் புதூர் அழகர்சாமி, ராஜசேகரன், சையது ராபின், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சின்னையா, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நவநீதபாலன், நகர ஜெ பேரவை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆத்தங்கரைப்பட்டி ஆறுமுகம், தெற்கு ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், வழக்கறிஞர் முருகேசன், நகர மகளிர் அணி செயலாளர் பூக்கடை பிரேமா, 18 வது வார்டு செயலாளர்கள் அச்சு கட்டு சுல்தான், நகர எம்ஜிஆர் மன்றம் சேகர், சௌமியநாராயணபுரம் ராஜா, குறிஞ்சி நகர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..