காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது
15/09/2025 07:26:34pm.

காரைக்குடி செப்:15 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பில் துறை மற்றும் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியரிங் ( இந்தியா) காரைக்குடி மையத்தின் சார்பில் உலக பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) பிருந்தா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியரிங் இந்தியா காரைக்குடி மைய உறுப்பினர்கள் பொறியாளர் சேவியர் அந்தோணி ராஜ் மற்றும் பொறியாளர் மகேந்திரன் மாணவர்களுக்கு இளம் டிப்ளமோ மாணவர்களின்" இளம் பொறியியல் பொறுப்பு எதிர்கால வாய்ப்புகள் சிவில் இன்ஜினியரிங் துறை சமூக பங்கு " ஆகிய தலைப்புகளில் ஊக்க உரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சிவில் பொறியாளர்களின் சமூக பொறுப்புகள் மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். விழாவில் அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் தலைவர் பொறியாளர் சி.முருகேசன், செயலாளர் பொறியாளர் பா. வருண், பொருளாளர் பொறியாளர் எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், அமைப்பியல் துறை தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..