?>
தமிழ்மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன் திருப்புத்தூர் 12வது வார்டில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என திமுகவினர் உறுதிமொழி!

15/09/2025 07:25:40pm.

திருப்புத்தூர் செப்:15 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் 12 வது வார்டில் பாகம் எண் : 203, 204, 205ல் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் வார்டு கவுன்சிலரும், மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளருமான பிளாசா ராஜேஸ்வரிசேகர் தலைமையில், நகர செயலாளர் கார்த்திகேயன், திமுக நிர்வாகி பிளாசா சேகர் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்க, தமிழகமெங்கும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதற்கிணங்க, திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்கட்சியினரால் இந்த உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு வருகிறது. உறுதிமொழியில், நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் வாக்குரிமையை பறிக்கும் SIRக்கு எதிராக நிற்பேன். நீட்டை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்; உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன் என திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதன் அடிப்படையில் திருப்புத்தூர் 12 வார்டு பகுதியில் திமுகவினருடன், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டை தலைகுனியே விடமாட்டேன் என்ற உறுதிமொழியை ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் பாஸ்கரபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரம், சாகுல்ஹமீது, சண்முகம், ஜெயராமன், அன்புச்செழியன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்..