கல்வி பணியோடு சமூக பணியையும் ஆற்றி வருகிறது கிறிஸ்துராஜா பள்ளி பல்வேறு துறைகளில் தலைவர்களை உருவாக்கி வருபவர் விக்டர் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் புகழாரம்.
14/09/2025 04:53:00pm.

திருப்புத்தூர் செப்:13 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருப்புத்தூர் வர்த்தக சங்கம் கிறிஸ்து ராஜா லியோ சங்கம் இணைந்து மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற மருது சீமை மைந்தர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திருப்புத்தூர் தனியார் மஹாலில் நடைபெற்றது. பள்ளியில் தலைவர் விக்டர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் தாளாளர் ரூபன் அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளி மாணவி லியோ அருள் இமானிஷா வரவேற்புரை நிகழ்த்தினார். கடந்த 2018 இல் இருந்து இன்று வரை மாவட்ட முழுவதிலும் இருந்து நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவர்களுக்கு நேற்று திருப்புத்தூரில் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வர்த்தக சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய பேராசிரியர்கள் கல்வி பணியோடு சமூக பணியையும் ஆற்றி வருகிறது கிறிஸ்துராஜா பள்ளி பல்வேறு துறைகளில் தலைவர்களை உருவாக்கி வருபவர் விக்டர் என நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டினர். ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை புரிந்து வந்த பள்ளியின் நிறுவனர் விக்டர் அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பணியாளர்கள், வர்த்த சங்கத்தினர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக விழாவினை திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன் துவக்கி வைத்தார், சிறப்பு விருந்தினராக லயன் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜி.ஆதிலெட்சுமி பங்கேற்றார், சிறப்பு பேச்சாளராக காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் சொற்சிலம்பர் பேராசிரியர் டாக்டர் எம்.சிதம்பரம் ஆசிரியப் பணி குறித்து உரையாற்றினார், கௌரவ விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை அசிஸ்டன்ட் கமிஷனர் வி.எழிலரசு பங்கேற்றார், மேலும் திருப்புத்தூர் நகர் வர்த்தக சங்க தலைவர் அந்தோணி ராஜ், பள்ளியின் முன்னாள் மாணவர் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராஜாக்கிளி கான்முகமது, லயன்ஸ் மாவட்ட சேர்மன் டென்சிங் அருள்ராஜ், ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி முன்னாள் வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் ஏ.சுப்பிரமணியன், வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் ந.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சாக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் ஆர்.முருகேஸ்வரி, கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.இராமர், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் முதல்வர் கே.ரவிக்குமார், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ரெஜினா ஞான செல்வி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.பாக்கியம், சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் யூ.சுரேஷ், சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் வி.மரிய செல்வி, மணலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர்.முருகேசன், மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.விஜயராணி ஆகியோருக்கு கேடயம் வழங்கி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்புத்தூர் வர்த்தக சங்கம், கிறிஸ்துராஜா லியோ சங்கம் இணைந்து செய்திருந்தனர்..