?>
டைடானிக் கப்பலை தெரிந்த மாணவர்கள், சுதேசி கப்பலை தெரியவில்லை திருப்புத்தூரில் வ உ சி வேடமணிந்த வாத்தியாரின் (ஆசிரியர்) உருக்கமான பேச்சு!

20/08/2025 06:00:51pm.

திருப்புத்தூர் ஆக:16 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே சம்பபட்டியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்திய தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர் வ.உ.சிதம்பரனார் வேடம் அணிந்து திருப்புத்தூர் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்தார். அங்கு பேருந்தில் ஏறியவர் தன்னுடன் பயணித்த மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வை வழங்கினார். தொடர்ந்து வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றவர், அங்கு மாணவர்களிடைய சுதந்திரம் கிடைக்க தலைவர்கள் பட்ட பாடுகளையும், வ.உ .சிதம்பரனார் பட்ட பாடுகளையும் விழிப்புணர்வாக வழங்கினார். டைடானிக் கப்பலை தெரிந்த மாணவர்கள், சுதேசி கப்பலை தெரியவில்லை என வேதனையோடு கூறியவர் நாம் அனைவரும் வஉசி போல் இருக்கு வேண்டும். நமது நாட்டில் தயாரிக்கும் பொருட்களையே வாங்குறுதிலும், விற்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டு கொண்டார். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த நிலையில், வஉ.சிதம்பரனார் வேடமணிந்து ஆசிரியர் ஒருவர் பொதுமக்களியே விழிப்புணர்வை ஏற்படுத்தியது இப்பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..