?>
திருப்புத்தூர் வட்டாரத்தில் கிசான் கோஸ்திஸ் மற்றும் வயல் விழா குறித்த விவசாயிகள் கூட்டம்

09/08/2025 02:01:21pm.

திருப்புத்தூர் ஆக:07 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கிசான் கோஸ்திஸ் என்ற வயல் விழா நிகழ்ச்சி ஒழுகமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற சிவகங்கை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ந.சண்முகஜெயந்தி கலந்துகொண்டு வேளாண்துறை சார்ந்த திட்டங்களான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய திருப்புத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் அ.தனலட்சுமி மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் விதை நேர்த்தி தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். தோட்டக்கலைத் துறை சார்பாக கலந்து கொண்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் வினோதா தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் குமரவேல் பருவத்தின் போது விவசாயிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் சார்பாக கலந்து கொண்ட தினேஷ் பாபு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் பற்றியும், இலவசமாக வழங்கப்படும் பயிற்சிகள் பற்றியும் எடுத்துரைத்தார். கால்நடைத்துறை சார்பாக கலந்து கொண்ட கால்நடை உதவி மருத்துவர் அமுதன் கால்நடை த்துறை சார்பாக செயல்படுத்தப்படுத் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பாக கலந்து கொண்ட உதவி வேளாண்மை அலுவலர் மணிவேல் மின்னணு வர்த்தகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இக்கூட்டத்தில் மண்மாதிரி சேகரித்தல், சிறுதானிய தொழில்நுட்பம், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம், உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வேளாண் விரிவாக்கம் மையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்கள் விவசாயிகளுக்கு கண்காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் மு.சுதர்சன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்களான சண்முகப்பாண்டி,. கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்..