?>
காரைக்குடி நேஷனல் ஃபயர் மற்றும் சேப்டிக் கல்லூரியில் "ஆருயிர்-அனைவருக்கும் உயிர் காப்போம்" முதலுதவிப் பயிற்சி முகாம்

02/08/2025 10:10:10pm.

காரைக்குடி ஆக: 02 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேஷனல் ஃபயர் மற்றும் சேப்டிக் கல்லூரி தமிழ்நாடு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காரைக்குடி குளோபல் மருத்துவமனை இணைந்து "ஆருயிர் அனைவருக்கும் உயிர் காப்போம்" பயிற்சி முகாம் நேஷனல் ஃபயர் மற்றும் சேப்டிக் கல்லூரி கலையரங்கில் நடைப்பெற்றது. நேஷனல் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவருமான அரிமா சையது தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் தனசீலன் வரவேறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி தொடக்க உரையாற்றினார். முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆரோக்கிய இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அனுரத்னா சிறப்புரையாற்றினார். ஆருயிர்-அனைவருக்கும் உயிர் காப்போம்" முதல் உதவிப் பயிற்சியை காரைக்குடி குளோபல் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் குமரேசன் தலைமையில் மருத்துவர் பிரவீன் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் இதய நுரையீரல் புத்துயிர் பெற்று (சிபிஆர்) உயிர் பிழைக்கச் செய்தல், தீக்காயம், பாம்புக்கடி, வலிப்பு மற்றும் பக்கவாதம், நீரில் மூழ்குதல் , மூச்சுத் திணறல் ஆகியவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களை விபத்தின்போது முதல் உதவி செயல்பாட்டால் எவ்வாறு காப்பாற்றலாம் என்பது குறித்து நேரடி செய்முறை விளக்கம் மூலம் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் பிரபு காரைக்குடி கிளைத் தலைவர் செந்தில்குமார். செயலாளர் முனைவர் முனியப்பன், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பயிற்சியின் நிறைவில் ஆகஸ்ட் 6 ஹிரோசிமா நாகசாகி தினத்தை நினைவுக் கூர்ந்து "உலகினை அழித்திடும் யுத்தமே வேண்டாம், எங்கும் பறக்கனும் வெள்ளைப்புறா" என்ற "யுத்தம் தவிர்" என்ற பாடலை பங்கேற்பாளர்கள் அனைவரும் பாட பயிற்சி நிறைவுப் பெற்றது. சேஃப்டி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வானவில் மன்ற கருத்தாளர்கள் உட்பட நூறு பேர் இம்முதலுதவிப் பயிற்சியை பெற்றனர். நேஷனல் கல்வி நிறுவனத்தின் மக்கள் நல அலுவலர் ராஜு நன்றியுரையாற்றினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை சேப்டிக் கல்லூரி துணை முதல்வர் வினோத் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்..