?>
திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்! அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் திறந்து வைத்து குளிர்பானங்கள், பழங்கள் வழங்கினர்

23/04/2025 07:44:41pm.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருக மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளரும், முன்னாள் மாவட்ட சேர்மனுமான பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதனை அதிமுக அமைப்பு செயலாளர் ஏகே.சீனிவாசன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் ஆகியோர் திறந்து வைத்து நீர், மோர், சர்பத், இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவும் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.கே.உமாதேவன், சிவகங்கை மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், திருப்பத்தூர் நகர் கழகச் செயலாளர் இப்ராம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், மாவட்ட இளம்பெண் இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எல்.ஆர்.எம்.ராஜா, மாவட்ட கவுன்சிலர் மதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துளாவூர் பார்த்திபன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் சஃபா ராஜா முகமது, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் புதூர் அழகர்சாமி, ராஜசேகரன், சையது ராபின், நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவீந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை துணைச் செயலாளர் தானிப்பட்டி கணேசன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சின்னையா, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நவநீதபாலன், நகர அம்மா பேரவை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டியன், ஞானசேகரன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆத்தங்கரைப்பட்டி ஆறுமுகம், கிழக்கு ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் நகர துணைச் செயலாளர் இரா.சந்திரன், நகர மகளிர் அணி செயலாளர் பூக்கடை பிரேமா, வார்டு கழக செயலாளர்கள் சீனிவாசன், துரைப்பாண்டி, நகர எம்ஜிஆர் மன்றம் சேகர், கழகப் பேச்சாளர்கள் குறிஞ்சி நகர் சேது, தனபால், அப்துல் பாரித் கருப்பூர் திருஞானம், காட்டம்பூர் ரமேஷ், வெள்ளைச்சாமி, சௌமியநாராயணபுரம் ராஜா, அச்சுக்கட்டு சுல்தான், தானிப்பட்டி சக்திவேல், காரையூர் கிளைக் கழக செயலாளர் முத்து காளியப்பன், திருப்பத்தூர் தண்டபாணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்..