மகளிர் தினத்தை முன்னிட்டு பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஒளிப் பெருக்கி வழங்கப்பட்டது..
06/03/2021.

இரா.பாஸ்கர் செய்தியாளர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிரை போற்றும் வண்ணம் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வான் உயர்ந்த சாதனைகளை பல படைத்து வருவதை பாராட்டி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன் தலைமையில் இரண்டாம் நிலைத்தலைவர் டாக்டர் வெங்கடேஷ் சங்கையா பங்களிப்புடன் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா முன்னிலையில் சங்கத்தின் கெளரவத்தலைவர் செல்வராணி பாரதி சின்னையா ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயன்படுத்தும் வகையில் புதிய வகை ஒலிப்பெருக்கி மைக் செட் ஒன்றினை பள்ளிக்கு நினைவு பரிசாக அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் வழங்கினர்.
.