?>
ஏ.வேலங்குடி ஊராட்சி மலம்பட்டியில் 14-வது நிதி குழு மானியத்தில் பேவர் பிளாக் சாலைப்பணி நிறைவு

26/07/2021 07:05:41pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டியில் அங்கன்வாடி முகப்பில் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் தை.அந்தோனிசாமி முயற்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து மரவர் குடியிருப்பில் ரோடு ஒரு பகுதி நீண்ட காலமாக மக்களுக்கு மழை காலத்தில் சகதியும் கப்பி கற்களுமாக மக்களுக்கு பயனற்று கிடந்தது, ஊராட்சி மன்ற தலைவர் 14-வது நிதி குழு மானியத்தில் நிதி ஒதிக்கீடு பெற்று செய்யப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது மகிழ்ச்சியில் மலம்பட்டி ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தை.அந்தோனிசாமிக்கு நன்றியை தெரிவித்தார்கள், பேவர் பிளாக் சாலைப்பணி நிறைவு பெற்றதை ஊராட்சி மன்ற தலைவர் தை.அந்தோனிசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அ.நிஜாம்தீன் பொதுமக்களுடன் நேரில் பார்வையிட்டார்கள்..