?>
சிங்கம்புணரி உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆர்சனிகம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப்பட்டது..

21/06/2021 09:08:45am.

     சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கண்டமங்கலபட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கூடிய ஆர்சனிகம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
     சிவகங்கை மாவட்டத்தை கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் சிங்கம்புணரி தாலுகா கண்டமங்கலபட்டி ஊராட்சி தலைவர்  ராஜ்குமார்  தலைமையில், உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் ரோகினி விஜயகுமார்  முன்னிலையில் விழிப்புணர்வு முகாம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கூடிய ஆர்சனிகம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
   இதில் உதவும் இதயங்கள் அறக்கட்டளை மாநில துணை தலைவர் விஜயகுமார், மாநில செயலாளர் டாக்டர் நந்தினி முருகன், சிவகங்கை மாவட்ட தலைவர் கார்த்திக் ராஜா, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
.