மாந்தக்குடிப்பட்டி ஊராட்சித் தலைவர் லயன் ரவிச்சந்திரன் பெரும் முயற்சியில் காந்திநகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டது..
25/04/2021 11:20:57am.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் மாந்தக்குடிப்பட்டி ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மாந்தக்குடிப்பட்டி காந்திநகர் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லயன் ரவிச்சந்திரன் முயற்சியால் நேன்று புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறையை சரி செய்தனர். புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்த ஊராட்சித் தலைவர் ரவிசந்திரனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலா, ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்..






