?>
ஜெர்மனியில் கரோனா பலி 50,000-ஐ தாண்டியது

22/01/2021.

ஜெர்மனியில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் தேசிய மருத்துவ மையமான ராபர்ட் கோட்ச் கூறும்போது, “ ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,862 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,06,262 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 859 பேர் பலியாக கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று. கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
 
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
ஜெர்மனியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
.