தேவகோட்டை வார சந்தையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
18/04/2021 06:10:53pm.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட அலையாக கொரானா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது, இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் TUJ தேவகோட்டை கிளை சார்பில், வாரச்சந்தை முன்பாக தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் ராஜமாணிக்கம், தாலுகா காவல் துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசத்தை வழங்கினார் இந்நிகழ்வில் தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்தூர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..






