?>
திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் நூலகர் தின விழா

12/08/2025 08:53:52pm.

திருப்புத்தூர் ஆக :12 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது. நூலகர் இரா.மகாலிங்க ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார் நூலக வாசகர் வட்ட தலைவர் எல்.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார் இவ்விழாவில் திருப்புத்தூர் வட்டார நூலகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர், திருப்புத்தூர் நூலகத்திற்கு கணினி அச்சு இயந்திரம் நன்கொடையாக வழங்கிய திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவருக்கு நூலகத்துறை சார்பாகவும் ஊதியமைய நூலகர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி வாழ்த்துரை வழங்கினார் விழாவின் முடிவில் சுரேஷ் காந்த் நன்றி உரை ஆற்றினார் விழாவிற்கான ஏற்பாடுகளை நாராயணன் குணசேகரன் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர் வாசகர்கள் பொதுமக்கள் திருப்புத்தூர் ஒன்றிய அனைத்து நூலகர்கள் திரளாக கலந்து கொண்டனர் நூலகர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற நூலகர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன..