?>
நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்

10/03/2025 09:48:02pm.

காரைக்குடி மார்ச் :10 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லுரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சங்கந்திடல் கிராமத்தில் நடைபெற்றது. “கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு” என்பதை மையக்கருத்தாகக் கொண்டு மாணவ, மாணவியர் களப்பணியாற்றினர். முகாமை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. திருக்குமரன் வரவேற்ப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ரெ. சந்திரமோகன் தலைமையுரை வழங்கினார். சங்கந்திடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எல். ஜோஷ்பின் மற்றும் ஆசிரியர் சிவாஜி வாழ்த்துறை வழங்கினார்கள். பின்னர் சு. லெட்சுமணன் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பற்றிய புரிதலை மாணவர்களுக்கு விளக்கினார். அதனை தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. நிஜந்தான் நன்றியுரை வழங்கினார். அதன் பின்னர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் சுத்தம் செய்தனர்..