?>
திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இலவச சட்ட விழிப்பணர்வு முகாம்

29/01/2025 09:19:41pm.

திருப்புத்தூர் ஜன :29 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திருப்புத்தூர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிக்குழு ஏற்பாட்டில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வழக்கறிஞர் முருகேசன் மாணவ, மாணவிகளுக்கான சட்டப் பாதுகாப்புகள், மாணவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார். முன்னதாக பள்ளி தாளாளர் ரூபன் அனைவரையும் வரவேற்றார், மாணவர்களிடையே கலந்துரையாடல் செய்து மாணவர்களின் பல்வேறு சந்தேகங்கங்களுக்கு விளக்கமளித்தார். சட்டப் பணிக்குழு உறுப்பினர்கள் ஆர்த்தி, மாரிக்கண்ணு ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்..