திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
27/11/2024 07:29:53pm.
திருப்புத்தூர் நவ :26 சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் திருப்புத்தூர் பாபா அமீர் பாதூஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். அகமது தாரிக் 8ம் வகுப்பு U-14 பிரிவிலும் எஸ். சைஃபுல் பாரி 7ம் வகுப்பு U-17 பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வி.சிலம்பரசன், வெற்றி பெற்ற மாணவர்களையும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி தாளாளர் ஹாஜி லயன்.பாபா அமீர் பாதூஷா ஆகியோர் பாராட்டினர்..






