திருப்புத்தூரில் சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சார்பாக 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா நடைபெற்றது.
27/09/2024 11:43:30am.
திருப்புத்தூர் செப் :22 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தனியார் மஹாலில் சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சார்பாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கிராமப்புறங்களில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பரமசிவம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 12 மற்றும் 10 ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் ரொக்கம், புத்தகங்கள், பரிசுகளாக வழங்கப்பட்டது. கல்வியே ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, கல்வியில் பின்தங்கிய கிராம புறங்களில் உள்ள மாணவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த அறக்கட்டளையை உருவாக்கி கடந்த 8 ஆண்டுகளாக பரிசுகள் வழங்கி வருவதாக அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூறினர். அப்போது மாணவர்கள் தாங்கள் விரும்பும் இலட்சியங்களை மேடையில் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். செயலாளர் சக்திவேல் துணைத் தலைவர் பாண்டிக்கண்ணன், துணைப் பொருளாளர் குருசாமிகுமார் ஆகியோர் முன்னிலையில் 8வது ஆண்டாக இந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் துணைச் செயலாளர் காளைலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்யில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்வியாளர், போட்டி தேர்வு பயிற்சியாளர் பாலகுருநாதன், பட்டிமன்ற நடுவர் சாத்தை பாரதிதாசன், சிங்கம்புணரி லயன்ஸ் கண்ணன், ஆசிரியர் மாரிமுத்து, கல்லந்திரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசாக 12008 இரண்டாம் பரிசாக 10008, மூன்றாம் பரிசு 8008, நான்காம் பரிசாக 6008 ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோன்று பத்தாம் வகுப்பிற்கு முதல் பரிசாக 10008, இரண்டாம் பரிசு 8008, மூன்றாம் பரிசு 6008, நான்காம் பரிசாக 4008 வழங்கப்பட்டது. மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜெயமங்கலம் சுப்பையா தொகுத்து வழங்கினார். அழகு, சின்னையா, பூமி, மகாலிங்கம், மணி, ரமேஷ், முருகேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். துணைச் செயலாளர் காளைலிங்கம் நன்றியுரை நிகழ்த்தினார்..






