சிவகங்கை மாவட்டத்தில் அன்பாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி.
07/09/2024 03:22:53pm.
சிவகங்கை செப் : 07 அன்பாசிரியர் விருதுக்கு தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் 148 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இணைய வழியில் நேர்காணல் நடத்தப்பட்டு 39 பேரை அன்பாசிரியர்கள் விருதுக்கு மூத்த கல்வியாளர்கள் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி அன்பாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை தி. நகரில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பெருமைப்படுத்தினார். மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல் மாறுபட்ட சிந்தனை புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து சமூக அக்கறை ஊட்டி நற்பண்புகளை போதித்து அறிவியல் மனப்பான்மையைக் கொண்ட மாணவர்களை உருவாக்கும் பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியப் பணியை 29 ஆண்டுகளாக செய்து வரும் அன்பாசிரியரை இந்து தமிழ் திசை நாளிதழ் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து ஆசிரியர்கள் கல்வியாளர்கள் பல அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்..






