?>
காரைக்குடியில் 30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள் வாசித்து உலக சாதனை படைத்த சிறுவர்கள்.

13/08/2024 10:15:02am.

காரைக்குடி ஆக :12 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் மண்டபத்தில், மெட்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு இசை வாத்தியங்களை வாசித்து உலக சாதனை படைத்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் - ராதா தம்பதிகளின் மகன் தீபக் (12) டிரம்ஸ் வாசிக்க, காரைக்குடியை சேர்ந்த முருகேசன் - சரண்யாவின் மகன் ஹரிதர்ஷன் (13) கீபோர்டு மூலம் 30 நிமிடங்கள் தமிழ் திரைப்பட பாடல்களை இடைவிடாது வாசித்து சாதனை படைத்தனர். காரைக்குடி காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், இந்தியா புக் ஷாப் ரெக்கார்டு நிறுவன நடுவர் சாகாயராஜ் முன்னிலையில் இச்சிறுவர்கள் இச்சாதனையை படைத்தனர். சிறுவர்கள் 30 நிமிடங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு இசைவாக்கியங்களை நேர்த்தியாக வாசித்ததை உலக சாதனையாக ஏற்றுக்கொண்ட இந்தியா புக் ஷாப் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் சாதனை சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய நடுவர் சகாயராஜ் பயிற்சியும், முயற்சியும் வெற்றியாளர்களை அடையாளம் காட்டும் எனவும், பயிற்சிக்கு ஆசிரியர்களும் முயற்சிக்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்ததால் இச்சதனையை படைத்ததாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீ போர்ட்டு ஆசிரியை ரமாமணி, டிரம்ஸ் ஆசிரியர் ரகுநாத், இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த சிறுவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்..