காரைக்குடி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் செயலாளர்களை கௌரவப்படுத்தும் விழா
31/07/2024 06:26:47pm.
காரைக்குடி ஜூலை:31 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் செயலாளர்களை கௌரவப்படுத்தும் விழா நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக விஜய் தொலைக்காட்சியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்வின் மூலம் கோப்பை வெற்றியாளர் மண்ணின் மைந்தன் காரைக்குடி மு. ராகவேந்திரன் சிறப்புரை ஆற்றினார் சங்கத்தின் உறுப்பினர் ரொட்டேரியன் பி பி ஏ ராகவேந்திரன் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்ஸை எஸ்எம்எஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கினார், இதனை எஸ் எம் எஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாமலை பெற்றுக் கொண்டனர். விழாவை ரொட்டேரியன் தலைவர் எல்.எம்.லட்சுமணன், செயலாளர். ஏ. அடைக்கப்பன், பொருளாளர் ஏ.ஆர். பழனியப்பன் கிளப் சர்வீஸ் டைரக்டர் தேவன் கம்யூனிட்டி சர்வீஸ் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்,.






