?>
கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

24/04/2024 08:06:37am.

திருப்புத்தூர் ஏப்:23 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சி்த்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.16 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு பூதகி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து தினசரி காலை பல அலங்காரங்களில் அம்பாள் பவனியும், இரவு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று காலை விரலி மஞ்சள் அலங்காரத்திலும், இரவில் காமதேனு வாகனத்திலும் அம்பாள் வீதி வலம் வருகை புரிந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு மகா கணபதி, மாணிக்கநாச்சி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். மாலை 4:30 மணிக்கு குழந்தைக்கு தொட்டில் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு தேர்வடம் பிடித்து தெற்குபட்டு சென்றனர். ஏப் :24 இன்று காலை 9:00 மணிக்கு மூலஸ்தானத்திற்கு பால்குடம் எடுத்தல், மாலை 6:00 மணிக்கு தேர் திரும்புதலும், இரவு 7:00 மணிக்கு பன்னீர் திருவிழாவும் நடைபெறும். ஏப்.25 ல் காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டும், இரவு 10:30 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் பவனியுடன் விழா நிறைவடையும். நடப்பு காரியஸ்தர் வெ பழ வெ வெ. முரளி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்..