?>
திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி‌ நடைபெற்றது.

09/01/2024 06:22:45pm.

திருப்புத்தூர் ஜன:09 சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி (Skill Development program) நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சு.வரதராஜன் வரவேற்புரை வழங்க பள்ளியின் தாளாளர் ஹாஜி.பாபா.அமீர் பாதுஷா தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் எஸ்.பிரபு கலந்து கொண்டு திறன் மேம்பாட்டினை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் இவ்விழாவில் கௌரவ விருந்தினராக தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மதிவாணன், மற்றும் அனுஷியா பிரபுவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டினை பற்றி விரிவுரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து தி.புதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர், அம்மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் நிஜாம் ஒருங்கிணைப்பாற்றினார், தி.புதுப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்..