எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
29/08/2023 07:35:33pm.
எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள தேரேந்தல்பட்டி எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளியில் மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து மகிழ்ச்சியோடு இந்நாளை கொண்டாடினர்.
ஓணம் என்றாலே வண்ணங்கள் நிறைந்த பூக்கள் இல்லாமலா!!! என்பதற்கிணங்க ஆசிரியர்கள் அனைவரும் வகுப்பு வாரியாக கைகளால் மலர்களைக் கொண்டு மலர் ரங்கோலிகளை பூக்களங்களாக எஸ் கே எஸ் பள்ளியை அலங்கரித்தனர். இந்த ரங்கோலி கண்களையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் அன்பான வரவேற்பையும் அளிக்கிறது. இதில் பள்ளிமுதல்வர் சேக் ராசிக் , பள்ளி நிர்வாகி அழகு ,ஆசிரியர்கள் , மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை சிறப்பித்தனர்.
.






