?>
ஆறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர்சோலை முருகனுக்கு ஆட்டம் பாட்டத்துடன் மயில் காவடி . சிங்கம்புணரி வழியாக 108 காவடிகள் பயணம்.

25/08/2023 07:08:42pm.

ஆறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர்சோலை முருகனுக்கு ஆட்டம் பாட்டத்துடன் மயில் காவடி 
 
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்திலிருந்து பழமுதிர்சோலை நோக்கி பயணிக்கும் நேரத்தில் சிங்கம்புணரி வழியாக 108 காவடிகள் பயணம்.
          
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்  108 காவடிகள் கொட்டுமேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மயில் காவடி எடுத்து ஆடி பாடி சென்ற விதம் பொது மக்களை கவர்ந்தது.
               
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபையை சேர்ந்த பக்தர்கள் மதுரை மாவட்டம் அழகர் கோவில் பழமுதிர்சோலையில் வீற்றிருக்கும் அறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர்சோலையில் அருள்பாலிக்கும் திருமுருகப்பெருமானை தரிசிக்க மயில் காவடியுடன் கடந்த ஆகஸ்ட் 21 திங்கட்கிழமை புறப்பட்டனர்.
 
வழியெங்கும் ஆட்டம் பாட்டத்துடன் களைப்பு தெரியாமல் ஆடிய பக்தர்கள் மனம் உருக முருகன் பாடல் பாடி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.  ஐந்தாம் நாள் பயணமாக சிங்கம்புணரி வந்தடைந்த காவடிகள் பழமுதிர்ச்சோலை நோக்கி புறப்பட்டன.
           
கொட்டுமேளம் முழங்க சலங்கை சத்தம் வின்னதிர ஆட்டம் பாட்டத்துடன் ஆடி வந்த காவடிகளின் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் 108 காவடிகளும் சோலைமலை திருமுருகன் பெருமானின் சன்னதியில் சென்றடைந்து அங்கு 36 வகையான விசேட அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களுடைய யாத்திரையை இந்த குழுவினர் நிறைவு செய்ய உள்ளனர்.
.