திருப்புத்தூரில் எஸ்ஆர்சி. லெனா பாத்திரக்கடை பிரம்மாண்ட கட்டிடத் திறப்பு விழா.
20/08/2023 08:40:46pm.
திருப்புத்தூரில் எஸ்ஆர்சி. லெனா பாத்திரக்கடை பிரம்மாண்ட கட்டிடத் திறப்பு விழா. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நகரில் பாத்திர மற்றும் பர்னிச்சர் பொருட்கள் விற்பனை மையமான லெனா பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடையின் புதிய பிரமாண்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்புத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலாராணி நாராயணன் குத்துவிளக்கேற்றினார். அவரை தொடர்ந்து எஸ்ஆர்சி.லெனா மார்ட் உரிமையாளர் மலர்கொடி லெட்சுமணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், திருப்புத்தூர் வர்த்தக சங்கத் தலைவருமான எஸ்ஆர்சி.லெட்சுமணன், மஞ்சரி விமல்ராஜ் தங்கம் சோப் மதுரை, ரூபினி சரண்யா, தீபா ராஜாகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் பொருட்களை வாங்கிச் சென்றனர். புதிய கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், பால குருசாமி, வீரபத்திரன், ஜான்போஸ்கோ முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், திருப்புத்தூர் வர்த்தக சங்கத் தலைவருமான எஸ்ஆர்சி.லெட்சுமணன் பேசுகையில் உழைப்பே உயர்வு என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றும், அச்சமின்றி உச்சத்தை தொட நேர்மை மட்டுமே போதும் என்று பேசியவர் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கடை 74 ஆண்டுகாலம் கடந்து தற்போது பிரம்மாண்டமான வளாகமாக மாறி உள்ளது. 12 ரூபாய் முன் தொகையாகவும் ஆறு ரூபாய் மாத வாடகையாகவும் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கடையானது, கடின உழைப்பாலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பாலும் திருப்புத்தூர் நகரில் பிரமாண்டமாக அமையப்பெற்றது என வாடிக்கையாளர்களுக்கு புகழாரம் சூட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்புத்தூர் வணிகர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், என பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.






