?>
திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு புதிதாக 5 பேருந்துகள் இயக்கிட காங்கிரஸ் கவுன்சிலர் ஏகாம்பாள் கணேசன் கோரிக்கை.

02/07/2023 09:56:56am.

திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு புதிதாக 5  பேருந்துகள் இயக்கிட  காங்கிரஸ் கவுன்சிலர் ஏகாம்பாள் கணேசன் கோரிக்கை.
 
 
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து கொடைக்கானல், ராமேஸ்வரம், சென்னை, திருச்செந்தூர், பழனி மற்றும் பல நகரங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன திருப்புத்தூரிலிருந்து  தனியாக மதுரைக்கு புதிய வழித்தடங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை    திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு புதிய பேருந்துகள் இயக்கினால் திருப்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மதுரையிலிருந்து திருப்புத்தூருக்கு குடும்பத்துடன் இருக்கை வசதியுடன் அமர்ந்து பயணிக்கலாம். தொடர்ந்து திருப்புத்தூர் பொதுமக்களை மதுரையிலிருந்து ஏற்றாமல் கீழே இறங்கச் சொல்வது இருக்கையில் அமர்ந்தவர்கள் கீழே இறக்கி விடுவது போன்ற அவல நிலை மற்றும் மரியாதை குறைவான நடவடிக்கைகள் குறைந்து விடும் மதுரையில் இருந்து திருப்புத்தூர் வழியாக செல்லும் பேருந்துகளில் திருப்புத்தூரை  சேர்ந்தவர்களை ஏற்றாமலும் உட்கார இடம் கொடுக்காமலும் இறக்கிவிட்டு தொடர்ந்து கேவலப்படுத்தி வருகிறார்கள் பெரும்பாலும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுமார் 70 கிலோ மீட்டர் நின்று கொண்டே பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள் எனவே திருப்புத்தூரில் இருந்து மதுரைக்கு புதிய 5 பேருந்து வழித்தடம் உருவாக்கி புதிய பேருந்துகளை விரைவில் இயக்கிட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட பேரூராட்சி மன்ற கூட்டத் தீர்மானத்தில் தீர்மானம் நிறைவேற்றி திருப்புத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என 15வது வார்டு பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ஏகாம்பாள் கணேசன் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணியிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
.