கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி - கீழச்சிவல்பட்டி காங்கிரசார் கொண்டாட்டம்
13/05/2023 08:58:47pm.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி - கீழச்சிவல்பட்டி காங்கிரசார் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கியும் வெடிவெடித்தும் கொண்டாடினர்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கீழச்சிவல்பட்டி பேருந்துநிலையம் அருகே கூடிய காங்கிரசார் மத்தியரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமையல் எரிவாயு, விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் எரிவாயு உருளைக்கு மாலையிட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர். தொடர்ந்து மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர் தலைவர் அழகுமணிகண்டன், மாவட்டச் செயலாளர் செல்வமணி, திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேதுமெய்யப்பன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பழனிவேல்ராஜன், தொழிற்சங்கத் தலைவர் சுப.விஸ்வநாதன், விராமதி நாகராஜ், மாமுண்டி, அழகப்பன், முத்தூர் அழகு, சையது உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். ,
.






