12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுப் பெருமை தேடித் தந்த கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா
09/05/2023 09:12:06pm.
12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுப் பெருமை தேடித் தந்த கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா பள்ளித் தலைவர் விக்டர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ/மாணவியர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாகப் பள்ளி முதல்வர் தபசம் கரீம் அனைவரையும் வரவேற்றார்.
என்.வெற்றிச்செல்வன் என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 94 மதிப்பெண்களும், பொருளாதாரத்தில் 97 மதிப்பெண்களும், வணிகவியலில் 100 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியலில் 100 மதிப்பெண்களும், கணினி பயன்பாடுகளில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
562 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த என்.ஆர்த்தி என்ற மாணவி தமிழில் 88 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 88 மதிப்பெண்களும், இயற்பியலில் 99 மதிப்பெண்களும், வேதியலில் 99 மதிப்பெண்களும், உயிரியலில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 96 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.
560 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்த எஸ். நிவேதா என்ற மாணவி தமிழில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 85 மதிப்பெண்களும், இயற்பியலில் 94 மதிப்பெண்களும், வேதியலில் 97 மதிப்பெண்களும், கணினி அறிவியலில் 100 மதிப்பெண்களும் கணிதத்தில் 88 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்.
பள்ளித் தலைவர் ஏடி.விக்டர், தாளாளர் ரூபன், முதல்வர் தபசம் கரீம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவ/மாணவியர்களைப் பாராட்டி, வாழ்த்தினர். மேலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளித் தலைவர், தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.
.






