"எனது வாக்கு, எனது உரிமை" திருப்புத்தூரில் வருவாய் துறையினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வினியோகம்
06/03/2021.
திருப்புத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கை பதிவு செய்ய தவற விட மாட்டேன் என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வருவாய் துறையினர் பொதுமக்களிடையே வினியோகம் செய்தனர். இந்நிகழ்வில் தேர்தல் துணை வட்டாட்சியர் கமலகண்ணன் திருப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம் கிராம நிர்வாக அலுவலர் சின்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.





