?>
கோட்டையிருப்பில் சிவராத்திரி நிறைவு விழா சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திகடனாக செலுத்தி பக்தர்கள் வழிபாடு

26/02/2023 06:27:25pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள கோட்டையிருப்பு கிராமத்தில் குடிகொண்டுள்ள அருள்மிகு  சூரமாகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி நிறைவு.
 
விழா பக்தர்கள் புடைசூழ விமர்சையாக நடைபெற்றது. சுமார் 375 வருடம் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயில் இக்கிராம மக்களின் காவல் தெய்வமாக உள்ளது. கரந்தமலையிலிருந்து ஆற்றுவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அதன் பின்பு காேட்டையிருப்பு பெரிய கண்மாய் அருகில் மாயாண்டி  வகையராவிடம் அடைக்கலம் ஆனதாக கூறப்படும் சூரமாகாளி அம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் வைத்து கோட்டையிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோன்று இக்கோவிலில் மற்றொரு பிரம்மாண்ட விழாவாக கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவும் இங்கு வெகு விமர்சையாக நடைபெறும். பொதுவாக சிவராத்திரி விழாவானது ஒவ்வொரு கிராமத்துக்களிலும் 10 முதல் 15 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சிவராத்திரி விழா கொண்டாடிய பிறகு பாரிவேட்டைக்கு சென்று வேட்டையாடி, பின் வீட்டிற்கு வந்து வேட்டையாடியவைகளை படையளிட்டு குலதெய்வ வழிபாடு நடத்துவது மரபு. இதே போன்று மற்ற சில பிரிவினர்கள் தங்களின் குலதெய்வ கோவில்களில் ஆடு கோழிகள் வெட்டப்பட்டு பூஜைகள் நடத்தி கொண்டாடுவது மரபு. ஆனால் தற்பொழுது வேட்டையாடுவது தமிழக வனச் சட்டப்படி குற்றமென கருதுவதால் வேட்டையாடுவது கைவிடப்பட்டது. தற்பொழுது பல்வேறு கோவில்களிலும் ஆடுகள், கோழிகள் வெட்டப்பட்டு சிவராத்திரி பாரிவேட்டை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவராத்திரி நிறைவு நாளில் கோட்டையிருப்பு கிராமத்தார்கள் ஊர் மந்தையிலிருந்து அவரவர்கள் நேர்த்திக்கடனாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் சூரமா காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆடுகள் வெட்டப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டுவரப்பட்ட ஆடுகள் கோவிலில் வெட்டப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. வெட்டப்பட்ட ஆடுகளை பக்தர்கள் வீட்டிற்கு கொண்டு செல்வது கிடையாது. மாயாண்டி வகையறாவான 135 கோவில் பூசாரிகளிடம் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். பின்பு பூசாரிகள் அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.  சிவராத்திரி நிறைவு விழாவில் ஆடுகளை நேர்த்திகடனாக கொடுத்து கிராம மக்கள் அம்மனை வழிபாடு செய்து சென்றனர்.
.