?>
சுண்ணாம்பிருப்பு விளக்கு பகுதி நெடுஞ்சாலை வளைவில் தொடரும் விபத்து. தனியார் நிதி நிறுவன மேலாளர் - பல் மருத்துவர் வாகனம் விபத்தில் சிக்கியது இருவர் காயம்

18/02/2023 07:31:39pm.

சுண்ணாம்பிருப்பு விளக்கு பகுதி நெடுஞ்சாலை வளைவில் தொடரும் விபத்து. தனியார் நிதி நிறுவன மேலாளர் - பல் மருத்துவர் வாகனம் விபத்தில் சிக்கியது இருவர் காயம் 
 
சென்னை கன்னியாகுமரி தொழில் தட நெடுஞ்சாலை சுண்ணாம்பிருப்பு விளக்கு பகுதியில் திருப்புத்தூரை சேர்ந்த பல் மருத்துவர் மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மதுரை தனியார் நிதி நிறுவன மேலாளர் மதுரையில் இருந்து குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது சுண்ணாம்பிருப்பு விளக்கு பகுதி அருகே வாகனம் வளைவு பகுதியில் வரும்போது நிலை தடுமாறியதில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மதுரை தனியார் நிதி நிறுவன மேலாளரின் வாகனம் சாலை பள்ளத்தில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இன்றி  சிறுசிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர் இரண்டு வாகனங்களும் அதிக சேதம் ஏற்பட்டது இதனை அடுத்து நெடுஞ்சாலையில் அவ்வழியில் வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த 108 வாகனம் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிறு காயங்கள் ஏற்பட்ட நபர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவர் அழைத்துச் செல்லப்பட்டனர் இச்சம்பவம் குறித்து திருப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.