?>
புழுதிபட்டி சுற்றுப்புற பகுதிகளில் பிப் 9ம் தேதி மின் நிறுத்தம்

07/02/2023 08:34:45pm.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கோட்டம் எஸ்.புதூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட புழுதிபட்டி பீடரில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சாதன தளவாட சாமான்கள் புதிதாக மாற்றப்பட உள்ளதால் பிப்ரவரி 9ம் தேதி வியாழக்கிழமை அன்று மாயாண்டி பட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, இடையபட்டி, கொண்ட பாளையம், தேனம்பட்டி, கரியாம்பட்டி, புழுதிப்பட்டி, அண்ணாவிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருப்புத்தூர் மின் பகிர்வான செயற்பொறியாளர் செல்லதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
.