திருப்புத்தூரில் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்க்கு அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டு
16/01/2023 08:15:28pm.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 17). இவர் புதுவயல் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சுவீடனில் நடந்த ரில்டோன் உலக கோப்பை உலக செஸ் போட்டியில் பங்கேற்று 9 க்கு 8 புள்ளி பெற்று இந்தியாவின் 79 வது மற்றும் தமிழகத்தின் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார். சிவகங்கை மாவட்டத்தின் முதல் சாதனை பெற்றவர்
இந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவன் பிரனேசுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 17 வயதில் சாதனை செய்த பிரனேஷ் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது உடன் தந்தை ஆர்.முனிரத்தினம் தாயார் மஞ்சுளா சகோதரர் எம்.தினேஷ் ராஜன் மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சேது.காமேஸ்வரன் திருப்புத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் மாவட்ட மாணவர் அணி ராஜ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
.






