திருப்புத்தூரில் தை திருநாளை முன்னிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் திமுக கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
16/01/2023 08:14:46pm.
தைத்திருநாளை முன்னிட்டு ஒன்றிய நகர திமுக சார்பில் திருப்புத்தூரில் திமுக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரிய கருப்பன் பங்கேற்று அண்ணா சிலை சமஸ்கான் பள்ளி வாசல் தெரு காந்தி சிலை நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் யூனியன் சேர்மனுமான சண்முக வடிவேல் வடக்கு ஒன்றிய செயலாளர் விரமதி மாணிக்கம் கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி, பேரூராட்சி துணைத் தலைவர் கான் முஹம்மது, நகர பொருளாளர் சிபிஎம் பிச்சை முகமது, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் நகர துணை செயலாளருமான உதய சண்முகம், மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சேது.காமேஸ்வரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, மாவட்ட மாணவரணி ராஜ்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, பேரூராட்சி கவுன்சிலரும் நகர இளைஞரணி அமைப்பாளருமான பஷீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், சரவணன், பாண்டியன், நகர தலைவர் இராம.ரவி, பிளாசா குழும தலைவர் பிளாசா சேகர், பூக்கடை விஜயன், 9 வது வார்டு சோமசுந்தரம், தம்பி பட்டி வைரமணி, பேச்சாளர் ஷாஜகான், கண்டவராயன்பட்டி சண்.சீமான்.சுப்பையா வைகை அரிஹரசுதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மனோகரன், நகர செயற்குழு உறுப்பினர் ஹரி, திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.






