திருப்புத்தூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா திமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
19/12/2022 07:02:38pm.
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்புத்தூர் காந்தி சிலை அருகே பேராசிரியர் அன்பழகனின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமையில் திமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர், நிகழ்ச்சியில் திருப்புத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி, நகர துணை செயலாளர் உதய சண்முகம், பிளாசா குழும தலைவர் பிளாசா சேகர், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன், நகர அவைத் தலைவர் ராம.ரவி, நகர பொருளாளர் பிச்சை முகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், சரவணன், அபுதாஹிர், ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட பிரதிநிதி விஜயன், நகர துணை அமைப்பாளர் ஹரி, 9வது வார்டு சோமசுந்தரம், 6 வது வார்டு நவாஸ், 18 வது வார்டு திருஞானம் சம்பந்தம், கணேஷ் நகர் உதயகுமார், பேச்சாளர் ஷாஜகான், தானிப்பட்டி கருணாகரன், அழகர்சாமி, போஸ், பாலாஜி, சாய் ரமேஷ், வார்டு செயலாளர் ஜின்னா, வார்டு பிரதிநிதி முத்து முகமது, ஆனந்த், திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.






