தேர்தல் பணிகளை தங்களுக்கு வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு. சிங்கம்புணரி புகைப்பட கலைஞர்கள் சங்கம் கோரிக்கை
02/03/2021.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக 2021 சட்டசபை தேர்தல் பணிகளுக்கான பறக்கும் படை மற்றும் பதட்டமான தொகுதிகளின் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வீடியோ கலைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிகளை அந்தந்த பகுதியில் இருக்கும் புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கிட வேண்டும். என்ற கோரிக்கையுடன் வட்டாட்சியரிடம் சிங்கம்புணரி புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக மனு அளித்துள்ளனர். சிங்கம்புணரி புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் ரமேஷ், பொருளாளர் சேவற்கொடியோன், தலைமையிலான வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் சிங்கம்புணரி வட்டாட்சியர் திரு திருநாவுக்கரசை நேரடியாக சந்தித்து இந்த மனுவை அளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமென வட்டாட்சியர் தகவல் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இந்த புகைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசு செவி சாய்க்கும் அவர்களுக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..