காரையூரில் ஆபிசீஅ கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.
28/09/2022 09:00:01pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி என் எஸ் எஸ் மாணவர்கள் காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேற்கொண்டனர், முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார், கல்லூரியில் முதல்வர் ஜெயக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன் வாழ்த்துரையாற்றி முகாமினை துவக்கி வைத்தார், ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, கிராம செயலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் ஆஷ்மின், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த வள்ளி, விஜயா, தலையாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர், முகாமில் ஊராட்சி மன்ற வளாக பகுதி, அங்கன்வாடி மைய பகுதி, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகப்பகுதி, துணை சுகாதார நிலையம், அம்மன் கோவில் மற்றும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று நலப்பணி மேற்கொண்டனர், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார். முகாமில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் யோகா பயிற்சி, கொரோனா தடுப்பு முறைகள், மண்புழு வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேராசிரியர்கள் சிவச்சந்திரன், மாரிக்கண்ணு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
.






