சிங்கம்புணரியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் மெகா கோலப்போட்டி-வண்ண வண்ண கோலங்கள் போட்டு அசத்திய மாதர்கள்.
20/08/2022 05:31:52pm.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வார்டு எண் 10 பகுதியில் ஆர்எஸ்எஸ் சார்பாக மெகா கோலப்போட்டி நடைபெற்றது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோலம் போட்டியில் வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் பெண்கள் போட்டு அசத்தியிருந்தனர். கோகுல கிருஷ்ணன் வண்ண வண்ண மயில் குழந்தை கிருஷ்ணன் மற்றும் கண்ணைக் கவரும் வண்ணங்களால் ஆன ரங்கோலிகள் போட்டு மிகச் சிறப்பாக அழகுப்படுத்தி இருந்தனர்.
அந்தப் பகுதியில் வாழும் பெண்களே நடுவராக இருந்து வெற்றி பெற்ற கண்ணை கவரும் ரங்கோலி போட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கினர் மாலை நேரத்திலேயே சூடு பிடித்த இந்த நிகழ்வு இரவு 8 மணி வரை நீடித்தது.
.






