?>
காரைக்குடியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

05/08/2022 03:57:42pm.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சுந்தரம், நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் குமரேசன், நகர காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், சண்முகதாஸ், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, கிட்டு, நகர்மன்ற உறுப்பினர் அமுதா, பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்..