?>
காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் 59,162 பயனாளிகளுக்கு ரூ136.45 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

08/06/2022 06:16:10pm.

     சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார், நிகழ்ச்சியில் முன்னதாக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார், அதனை தொடர்ந்து 
 அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ24.77 கோடி செலவில் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும்.  ரூ 119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    பின்னர்  விழாவில்  59,162 பயனாளிகளுக்கு ரூ 136.45 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி,  ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.