?>
வேளாண் தொழில்நுட்ப முறை மலேசியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் - டத்தோ ரெனா. இராமலிங்கம் அழைப்பு.

24/05/2022 12:45:21pm.

    விவசாயத்தில் குறிப்பாக வேளாண் தொழில்நுட்ப முறையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதிலும், வேளாண் துறையில் அவர்களுக்கு  சிறந்த எதிர்காலத்தை  உருவாக்கித்தருவதிலும்,  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே   விசாலயன் கோட்டை, கலாம் கவி கிராமத்தில் உள்ள    சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்   இயற்கை முறையிலான வேளாண் தொழில்நுட்ப முறையை மலேசிய மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாமரை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம் அழைப்பு விடுத்தார்.
     அண்மையில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அப்துல் கலாம் பெயரை தாங்கி நிற்கும் அதன்  ஆய்வகத்தில் நடைபெற்ற வேளாண் தொ​ழில்நுட் முறை தொடர்பான  மாபெரும் ஆய்வரங்கில் உரையாற்​றுகையில் தாமரை தோட்டத்தின் உரிமையாளர்களில் ஒருவரான டத்தோ ரெனா. இராமலிங்கம் இந்த அழைப்பை விடுத்தார்.
    சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும்,கல்வியாளரும், வள்ளலுமான டாக்டர் சேதுகுமணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் தாமரை தோட்டத்தின் நிர்வாக திருநாவுக்கரசு,வேளாண் ஆய்வாளர் சந்துரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
       டாக்டர் சேதுகுமணனின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட டத்தோ ரெனா. இராமலிங்கம், தனக்கான உணவை தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற தாராக மந்திரத்துடன்  வேளாண் கல்வியில் புதுமை படைத்து வரும் சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பொறுப்பாளர்களை வெகுவாக பாராட்டினார். 
        தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் வேளாண் கல்வி பயிலும் பொருட்டு 250 ஏக்கர் நிலப்பரப்பளவில்  வேளாண் பயிற்சித்திட்ட​ங்களுக்கு பல்வேறு வளாகங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு வேளாண் கல்வியோடு, அது தொடர்புடைய செயல்முறை விள​க்கங்களை தந்து, கிராமங்களுக்கு மாணவர்களை அனுப்பி, அங்கே தங்க வைத்து, களப்பணியில் ஈடுபட வைப்பது மட்டுமின்றி வேளாண் குறித்த அனுபவங்களை பெற செய்து,  விவசாய  கல்வி மேன்மைக்கு பாடுபட்டு வரும் டாக்டர் சேதுகுமணனின் தலைமையிலான  சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று டத்தோ ​ரெனா இராமலிங்கம் புகழ்மாலை ​சூட்டினா​ர்.
       விவசாயத்திற்கு வேண்டிய அடிப்படை தேவைகளான ​நீர்ப்பாசன முறை, இயற்கை உரங்கள் தயாரிப்பு, திடக்கழிவு மேலாண்மை,   பூச்சிகளை கட்டுப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு,  தேன் உற்பத்தி, காய்கறிகளை பறிக்கும் முறை,  அறிவியல் சா​ர்ந்த மண் ஆய்வு, மண் புழு உர ம்  தயாரித்தல், ​மூலிகை செடிகள் நடவு,  பஞ்ச காவியம் தயாரிக்கும் முறை , இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடுதல், கவாத்து செய்யும் முறை போன்ற வேளாண் துறைக்கே  உரிய தொ​ழில்நுட்ப முறையை  மாணவர்களுக்கு   கற்று கொடுத்து, விவசாயத்திற்கு அவர்களை தயார் படுத்துவது  இன்றைய அத்தியாவசிய தேவையாகும் என்று டத்தோ ரெனா. இராம​லிங்கம் குறிப்பிட்டார். 
      இதுபோன்று வேளாண் துறையில் ஒரு நாடு அடிப்படை தொழில்நுட்ப முறையில் சிறந்து விளங்குமானால், அந்த நாட்டின் அடிப்படை உணவுத் தேவையை அந்த ​நாடே சொந்தமாக ஈட்டிக்கொள்ள முடியும் என்பதுடம் விவசாயம் சார்ந்த உணவு தேவையை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
     அந்த வகையில் விவசாயத்துறையில் அடிப்படை கட்டமைப்புகளுடன் உயர்ந்து வரும் மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கும் இயற்கை முறையில் புதிய தொழில்நுட்பத்துடன் வேளாண் க​ல்வி மற்றும் ஆராய்ச்சி ப​ரிமாற்றத்தை செய்த கொள்வதற்கு  சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முன் வர வேண்டும் என்று டத்தோ ரெனா. இராம​லிங்கம்  தமது உரையில் அழைப்பு விடுத்தார்.         இந்நிக​​ழ்வில் தலைமை உரை நிகழ்த்திய அந்த வேளாண் கல்​லூரியின் தலைவர் டாக்டர் சேதுகுமணன், விளை நிலங்கள் அனைத்தும் விவசாய உபயோகத்திற்கு பயன்பட வேண்டும், உணவு தேவையில் நாம் தன்னிறைவை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே மாணவர்களுக்காக இந்த வேளாண் கல்​வியியல், ஆராய்ச்சி கல்​லூரி நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
       அதேவேளையில் வேளாண்மை என்பது உண​வு தேவை சார்ந்த உற்பத்தி நடவடிக்கை மட்டும் அல்ல. சமூக இயக்கத்தின் உயிர்நாடியாகவும் , எல்லா காலத்திலும் நிலவி வரும் அடிக்கட்டுமானமாகவும்  இருப்பதால் அவற்றின் தேவையை வேளாண்மை  கல்வி வாயலாக மாணவர்களுக்கு  வழங்குவது  இக்கல்லூரியின் தலையாய நோக்கமாகும் என்றார். 
          ஆய்வரங்கில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அனைவரும் சேது பாஸ்கரா வேளாண்மை கல்​லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 250 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி  தொர்புடைய தனித்தனி ஆய்வகங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன.  இந்த ஆய்வரங்கில் திருப்புத்​தூர் திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், காரைக்குடி சண்முகம்,      திருப்புத்​தூர் சண்முகம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
.