திருப்புத்தூர் பெரியகண்மாய் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியினை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
23/04/2022 02:07:47pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பெரிய கண்மாயில் நீர்வளத்துறை யின் சார்பில் தனியார் வங்கியின் சமூகப்பொறுப்பு நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் கான் முகமது, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், பொதுப்பணித்துறை துணை பொறியாளர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், யூனியன் கவுன்சிலர் சகாதேவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சையது முகமது இப்ராஹிம் ராபின், பிளாசா ராஜேஸ்வரி சேகர், ரெமி சுலைமான் பாதுஷா, கோமதி சண்முகம், சரண்யா ஹரி, பசீர் அகமது, அபுதாஹிர், சீனிவாசன், சரண்யா ஹரி, சாந்தி சோமசுந்தரம், ஷமீம் நவாஸ், நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், பேச்சாளர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.






