பொன்னமராவதியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது..
07/01/2022 05:05:01pm.
இரா.பாஸ்கர் செய்தியாளர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்திய அஞ்சல் துறை சார்பில் பொன்னமராவதி தபால் நிலையத்தில் நடைபெற்று வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு புகைப்படம், தொலைபேசி எண், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மாற்றி பயனடைந்தனர். மேலும் ஆதர் திருத்தம் செய்யும் பணியாளர் பேசுகையில் மறு அறிவிப்பு வரும் வரை பொன்னமராவதி தபால் நிலையத்தில் ஆதர் திருத்தம் முகாம் நடைபெறும் என்றும் இந்த வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி கொண்டு புதிய ஆதார் எடுத்தல், பெயர் சேர்த்தல், தொலைபேசி எண்கள் மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ளலாம் என அப்பணியாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..






