பொங்கல் திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
07/01/2022 05:02:59pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா விராமதி ஊராட்சியில் நெற்குப்பை டாக்டர் அப்துல் கலாம் மாற்று திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கமும், டொனேஷன் ஏசி டிரஸ்ட்டும் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்பகுதிகளில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நலத்திட்ட உதவிகள், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகள், என பல்வேறு பயனுள்ள நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில் கீழச்சிவல்பட்டி , விராமதி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வர இருக்கின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், சிகப்பி ஆச்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரைச் செல்வி, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் கண்ணன், டொனேஷன் டிரஸ்ட் நிர்வாகி அருணாச்சலம், மற்றும் சங்க நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..






