?>
திருப்புத்தூரில் டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் அனுசரிப்பு. விசிக மற்றும் இளைஞர் அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

06/12/2021 06:22:45pm.

       சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் சட்ட மாமேதை, புரட்சியாளர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்புத்தூர் அண்ணாசிலை அருகில் வைக்கப்பட்ட அவரின் திருவுருவப் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.நகரச் செயலாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்கரை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விசிக மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

     இதேபோன்று புதுப்பட்டியில் அம்பேத்கர் இளைஞரணி சார்பாக டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் விஸ்டம் கமருதீன், மாவட்ட காட்சி ஊடக அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரன், சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்தமிழன், மாவட்ட அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி, திருப்புத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, சிவதிருப்பதி, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராமசந்திரன், சிங்கம்புணரி ஒன்றிய பொருளாளர் கோட்டை கண்ணன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சேகர், அறிவழகன், வேலங்குடி கிளைச் செயலாளர் வாசுதேவன், பாண்டியன், பெரியசாமி ராஜமுகுந்தன், திருக்களாப்பட்டி கிளைச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் தி.புதுப்பட்டி அம்பேத்கர் இளைஞரணியின் முன்னாள் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், அருண்ஜோதி, தலைவர் ராஜ்குமார், பொருளாளர் பிரபு, உறுப்பினர்கள் திராவிடன், சரவணக்குமார், பிரதீப், செல்வக்குமார், மனோமாறன், ஸ்ரீதர், சாரதி, பவித்ரன், கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.