விவசாய சட்ட மசோதாவை மத்திய அரசு விலக்கிக் கொண்டதை வெடி வெடித்து இனிப்பு வழங்கி கிழச்சிவல்பட்டியில் காங்கிரஸ், திமுகவினர் கொண்டாடினர்.
19/11/2021 03:45:51pm.
சிவகங்கை மாவட்டம் கிழச்சிவல்பட்டி பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சட்ட மசோதாவை மத்திய அரசு விலக்கிக்கொண்டதை கொண்டாடும் வகையில் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாடினர், இந்நிகழ்சியில் முன்னாள் எம்எல்ஏ சுப்புரம். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன். திமுக ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், திமுக நகர செயலாளர் சுந்தரராஜன், வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..






